ஒரு இரவுக்கு ரூ.1 லட்சம்! படுக்கைக்கு கூப்பிட்டார் நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

தன்னுடன் ஒரு நாள் இருக்க ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அழைப்புகள் வருவதாக நடிகை ஷாலு சம்மு கூறியுள்ளார்.


நடிகை ஷாலு கோலிவுட் திரையுலகில் ராசியான துணை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு முன்னணி கதாநாயகிகள் முதல் தற்போது வந்துள்ள புதுமுகம் வரை தோழியாக ஷாலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு, இவர் பார் ஒன்றில் ஓர் இளைஞனுடன் ஆபாசமாக நடனமாடிய வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் தானே வெளியிட்டு சுய விளம்பரத்தினை தேடிக்கொண்டார். மேலும் இயக்குனவர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பாக்கினார்.

அன்று முதல் படுக்கைக்கு கூப்பிட்டார் நடிகை என்று இவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில்  சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது, விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால், என்னுடன் படுக்கை அறையை பகிர வேண்டும் என்று இயக்குனர் ஒருவர் கூறியதாக பதிவு செய்து பரபரப்பை உண்டாக்கினார். 

நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "ஒரு லட்சம் ரூபாய் தரேன் என்னுடன் படுக்க வா" என்று ரசிகர் ஒருவர் தன்னை அழைத்ததாக பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் அந்த ரசிகர் தொடர்ந்து தன்னை ஒரு லட்சம் ரூபாய்க்கு அழைப்பதாக கூறியுள்ளார்.

இதனை ஏன் இப்படி பொதுவெளியில் ஷாலு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த ரசிகர் மீது ஏன் புகார் அளிக்கவில்லை என்றும் ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.