தனது மோசமான போட்டோவை தானே லீக் செய்த கார்த்தி ஹீரோயின்! அந்த புகைப்படம் உள்ளே!

தென்னிந்திய திரைதுறையில் வந்த சில காலத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தனது சிறப்பான நடிப்பின் மூலம் உருவாக்கியுள்ளார் ராஷ்மிக்கா மாண்டன்னா என்றே கூறலாம்.


சமீபத்தில்  இவரும் விஜய் தேவர்கொண்டாவும் இணைந்து நடித்த வெளிவந்த கீதா கோவிந்தம்  திரைப்படம் இவர்கள்  இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து "டியர்காம்ரேட்" என்ற படத்தில் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியி டப்படுகிறது.

பொதுவாக நடிகைகள் அடிக்கடி தன்னுடைய செல்ல பிராணிகளுடன் இருப்பது போலவும் அல்லது சில வித்தியாசமான தோற்றத்துடனும் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அந்த வகையில் தற்போது ராஷ்மிக்காவும் ஒரு புகைப்படத்தை டிவீட்டரில் வெளியீட்டுள்ளார். அதற்கு கேப்ஷன் ஆக  "நான் வீட்டிலிருக்கும் போது என்னுடன் செலஃபீ எடுக்க யாரேனும் ஆசைப்பட்டால் நான் இப்படிதான் கலைந்த கூந்தலுடனும், லூசான ஆடைகளுடனும் செலஃபீ எடுப்பேன் என்றும் கூறியிருந்தார் "

இந்த புகைப்படத்தின் சிறப்பம்சமே அவர் இதில் சிறிதும் மேக்கப் போடாமல் இருப்பதே ஆகும். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசென்கள் ராஷ்மிக்கா, மேக்கப் போட்டு எடுக்கும் புகைப்படத்தை விட மேக்கப் போடாமல்  எடுத்த இந்த புகைப்படம்  மிகவும் அழகாக உள்ளதாகவும் டிவீட்டரில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். https://twitter.com/iamRashmika/status/1124949752955584512