திருமண வீடாகும் பிக்பாஸ் வீடு! 31 வயது காதலனை 2வது கணவன் ஆக்கப் போகும் 33 வயது பெண் போட்டியாளர்! முழு வீச்சில் ஏற்பாடுகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு ஜோடி திருமணம் செய்ய தயாராக இருக்கிறது.


தமிழைப் போலவே ஹிந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சொல்லப்போனால் ஹிந்தியில் இருந்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தன்னுடைய 13வது சீசனை தொடங்க உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்னும் கருத்துக்கணிப்பு மக்களிடையே நடத்தப்பட்டு வருகிறது.

 இருப்பினும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் முழு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ராஷ்மி தேசாய் , ஆர்த்தி சிங் போன்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் நடிகை ராஷ்மி தேசாய் தன்னுடைய காதலர் அர்ஹானை பிக்பாஸ் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ராஷ்மி தேசாய் ஏற்கனவே திருமணமாகி மனக்கசப்பு காரணமாக தன் கணவரை பிரிந்து வாழ்கிறார் . இந்நிலையில் 33 வயதாகும் நடிகை ராஷ்மி , 31 வயதாகும் அர்ஹான் என்பவரை காதலித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மி தேசாய் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பங்கேற்பார் எனவும் மேலும் அவரது காதலன் அர்ஹான் இந்நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில வாரங்களுக்குப் பின்பு இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ராஸ் மியின் கசின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அர்ஹான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்து இடவில்லை என கூறப்படுகிறது. முந்திய சீசன்களில் சாரா கான் - அலி , மோனிஷா - விக்ராந்த் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.