இடுப்பு மடிப்புடன் ஒரே ஒரு புகைப்படம்! புதுச்சேரி முதலமைச்சருடன் மேடை ஏறிய ரம்யா பாண்டியன்!

இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் மேடை ஏறிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.


ஜோக்கர் என்று அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட படத்தில் நடித்தாலும் கூட யாருடைய கவனத்தையும் ரம்யா பாண்டியன் ஈர்க்கவில்லை. ஆனால் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் அவர் எடுத்த வெளியிட்டு இடுப்பு மடிப்பு புகைப்படங்கள் தற்போது வரை வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று கூட இடுப்பு மடிப்புடன் கூடிய சில புகைப்படங்களை ரம்யா வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த புகைப்படம் மூலம் திரைப்பட வாய்ப்புகள் வரும் என ரம்யா எதிர்பார்த்த நிலையில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்று ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது மேடை ஏறிய புதுச்சேரி முதலமைச்சருடன் சேர்ந்து நின்று ஒரு புகைப்படமும் கூட ரம்யா எடுத்துக் கொண்டார்.