டிடிவி முதலமைச்சர்! ஓபிஎஸ் - ஈபிஎஸ் துணை முதலமைச்சர்! டீல் பேசும் மத்திய அமைச்சர்!

இந்திய குடியரசு கட்சி (அ) தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் டி.டி.வி.தினகரன் இணைந்தால் அதிமுக கூடுதல் பலம் பெறும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவுடன் டி.டி.வி.தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாகவும், இன்றும் டி.டி.வி.தினரனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தம்புதுரையிடன் டி.டி.வி.தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசினேன், அப்பொது பேசிய தம்பிதுரை தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தம்பிதுரை கூறியதாகவும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக , டி.டி.வி.தினகரன் இணைந்தால், ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.