4 மாதங்களில் அயோத்தியில் வானுயர்ந்த ராமர் கோயில் .! மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி..!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அடுத்த நான்கே மாதத்தில் வின் உயர்ந்த ராமர் கோவில் கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் கூறியுள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் போட்டியாளர்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றியும் அமித்ஷா பேசினார். இந்த தேர்தல் பிரசாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பர்கூர் என்ற இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பல ஆண்டு காலமாகவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த வழக்கானது நிலுவையில் வந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. மேலும் இஸ்லாமியர்களுக்கு வேறு ஒரு இடத்தையும் ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அயோத்தியில் உள்ள இந்துக்களுக்கு சொந்தமான அந்த இடத்தில் பிரம்மாண்டமான வானுயர்ந்த ராமர் கோவில் 4 மாதங்களில் கட்டப்படும் என அமித்ஷா தன்னுடைய பிரச்சாரத்தில் கூறியிருக்கிறார்.