திமுக கூட்டணியில் விலை பேசி விற்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதி! நவாஸ் கனி வேட்பாளரான பின்னணி!

நவாஸ்கனிக்கு சீட்டை விற்று காசு பார்த்தாரா காதர் மொய்தீன் _ தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பம் ஆரம்பம்


ஸ்டாலின் இன்று காலை கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் தொகுதி என்று ஒதுக்கி அறிவித்தார். அந்த சூடு குறைவதற்குள் முஸ்லீம் லீக் ராமநாதபுரத்தில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டது. 

வழக்கமாக ராமநாதபுரத்தில் காதர் மொய்தீன் போட்டியிடுவார். ஆனால், இந்த முறை அவருக்குப் பதில் நவாஸ்கனி என்பவர் போட்டியிடுகிறார். எஸ்.டி. கொரியர் நிறுவன முதலாளியான நவாஸ் கனிக்கு எப்படி சீட் கிடைத்தது என்று பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

வயதானதால் நான் போட்டியிடவில்லை என்று காதர் மொய்தீன் சொன்னாலும், உண்மையான காரணம் காசு என்கிறார்கள். முதலாளி நவாஸ்கனியிடம் ராமநாதபுரம் சீட்டை விற்று காதர் காசு பார்த்துவிட்டார் என்கிறார்கள். இந்த விவகாரம் தெரிந்து தி.மு.க. ஆத்திரமடைந்துள்ளது. காசு பார்க்கத்தான் சீட் கொடுத்தோமா என்று கட்சி மேலிட நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்களாம்.