புதிதாக கல்யாணம் செய்து கொண்ட அந்த நடிகை வயிற்றில் வளர்வது என் குழந்தை! டிவி பிரபலம் வெளியிட்ட சீக்ரெட்!

கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட , நடிகை ராக்கி சாவந்த் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது என்று கூறி அதிச்சியளித்துள்ளார் அவருடைய முன்னாள் காதலர் , தீபக் கலால்.


நடிகை ராக்கி சவாத் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் . மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பிரபலமானவர். நடிகை ராக்கி சாவந்த் யூடியூபில் பிரபலமான தீபக் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் தங்களுடைய பெற்றோரின் சம்மதத்துடன் கூடிய சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று யாருக்கும் தெரியாமல் ராக்கி சாவந்த் லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ரித்தீஷ் என்பவரை திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். 

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அப்படி என்றால் தீபக்கை நீங்கள் இவ்வளவு மாதங்களாக காதலித்து வந்துள்ளீர்கள் . அவரது நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த நடிகை ராக்கி சாவந்த், தீபக் கலால் என்பவரை தான் காதலிக்க வில்லை எனவும் மேலும் அவர் தனக்கு நல்ல ஒரு சகோதரராக இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் நடித்து விட்டு தன்னுடைய கணவருடன் இணைந்து லண்டனில் செட்டில் ஆக போவதாகக் கூறியுள்ளார். ஆனால் ராக்கி சாவந்துக்கு இன்னும் திருமணமே  நடைபெறவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். 

இதே சமயத்தில் ராக்கியின் காதலரான தீபக் கலால் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் ராக்கி சாவந்த் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அந்த கர்ப்பத்தில் வளரக்கூடிய குழந்தை தன்னுடையது என்றும் அவர் கூறிவருகிறார் . இந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.