கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு வரவிருந்த ராஜ்நாத் சிங் தற்போது தன்னுடைய பயணத்தை ரத்து செய்து விட்டதாக தெரியவந்துள்ளது.
சின்மயி போட்ட பாலியல் ட்வீட்! சென்னை பயணத்தை ரத்து செய்த ராஜ்நாத்! அவமானத்தில் வைரமுத்து..! பரபர பின்னணி!
தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கவிஞர் வைரமுத்துவை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டமளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மத்திய ராணுவத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
இந்த அழைப்பிதழை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சின்மயி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "9 பெண்கள் எதிராக பாலியல் குற்றம் சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதற்கு ராணுவத்துறை அமைச்சர் வருகிறார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடைப்பதில்லை. ஆனால் பாலியல் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு மட்டும் வேலை போய்விடுகிறது.
அவருக்கு மொழிப்புலமை மட்டுமே மருத்துவப்பட்டம் அளிக்கப்படுகிறது என்பது எனக்கு தெரியும், அவருடைய பாலியல் இச்சைகளுக்குக்கூட டாக்டர் பட்டம் வழங்குங்கள். தற்போது அவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துவருகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களின் மேடைகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவரைக் கேட்பதற்கு யாருக்கும் நாதி இல்லை. நல்ல நாளு நல்ல சட்டம்" என்று சின்மயி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சின்மயியை போன்று பலர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர் இவருக்கு எவ்வாறு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்புகள் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளன.
இதனால் ராஜ்நாத் சிங் தற்போது தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.