ஸ்ரீதேவி மகளுடன் முதல் முறை! ஏக்கம் பெருமூச்சு விடும் சீனியர் நடிகர்!

கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த "லவ் செக்ஸ் ஆர் டோகா" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ராஜ்குமார் ராவ்.


இவர் நடித்த அணைத்து திரைப்படங்களும் இவருக்கு வெற்றி படங்களாக  அமைந்தது என்றே கூறலாம்.  இவர் தற்போது ஜான்வி கபூருடன் இணைந்து "ரூ அப்சா" என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  "நீங்கள் ஜான்வியுடன் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார் தொகுப்பாளர்.  இதற்கு சற்றும் யோசிக்காமல் "ஆமாம்! நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன் எனவும், மேலும் நடிகை ஜான்வி கபூர் ஒரு சிறந்த நடிகை , ஒரு நல்ல தோழி என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

நான் அவருடன் இணைந்து நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட் மிகவும் கலகலப்பாக இருக்கும் என நம்புகிறேன்  என்று ராஜ்குமார் கூறினார்.

மேலும் நடிகர் ராஜ்குமார் நடிப்பில் "மெண்டல் ஹாய் கியா" என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இது வரும் ஜூலை மாதம் 26-ம் தேதி வெளி வர காத்திருக்கிறது. அனால் இதே நாளில் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள "சூப்பர்-30" என்ற படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் சில சிக்கல்கள் உருவாகியுள்ளது.

இதனால் நடிகர்  ஹிருத்திக் ரோஷன் , "சூப்பர் -30"  திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் வேறு ஒரு நாளில் இந்த திரைப்படத்தை வெளியிடலாம் என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனை பற்றி ராஜுக்குமாரிடம் பேசிய போது, "படங்களை வெளியிடுவதர்கான முடிவுகளை தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள், இதற்கான எந்த முடிவுகளும் எனது கையில் இல்லை" என்று கூறினார்.

"ரூ அப்சா" திரைப்படத்தை தினேஷ் விஜயன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனரான ஹர்டிக் மெஹத இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு உத்ர பிரதேஷத்தில் நடத்த உள்ளனர்.

மேலும் இந்த படம் அடுத்த வருடம் மார்ச் 20 -இல் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.