28 வருடத்திற்கு பிறகு மீண்டும் மீனாவுடன்..! ஒப்புக் கொண்ட பிரபல நடிகர்!

நடிகர் ராஜ்கிரனுடன் நடிகை மீனா 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேர உள்ளார் .


நடிகர் ராஜ்கிரன் கதாநாயகனாக நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்  நடிகை மீனா . இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீனா மற்றும் ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம் அடைந்தனர் . நடிகை மீனா அதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், அஜித் போன்ற முன்னணி  ஹீரோக்களுடன்  ஹீரோயினாக நடித்து டாப் ஹீரோயினாக விளங்கினார் . 

நடிகர் ராஜ்கிரனின்  அடுத்த சில திரைப்படங்கள் சரியாக போகாததால் நடுப்பிற்கு முழுக்கு போட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் . சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ் சினிமா  ரசிகர்களின் பாராட்டை பெற்றார் .சேரன் இயக்கத்தில்  தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரணின் எதார்த்தமான  நடிப்பு  இன்றும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது . 

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரன் மற்றும் மீனா 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷைலாக்  என்ற  புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர் . மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரன் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது.