ரஜினி இளையமகள் 2வது திருமணம்! அமெரிக்காவில் தனுசுடன் நடைபெறும் குடும்ப பஞ்சாயத்து!

இளைய மகளுக்கு பிப்ரவரி மாதம் 2வது திருமணம் நடைபெற உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சனையை தீர்க்கவே நடிகர் ரஜினி குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.


  நடிகர் ரஜினி 6 மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா செல்வது வழக்கம்.சிங்கப்பூர் மருத்துவமனையில் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை மற்றும் மருத்துவ நடைமுறைகளுக்காக ரஜினி இப்படி ஆறு மாத இடைவெளியில் அமெரிக்கா செல்வது கட்டாயம். அந்த வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் அதாவது காலா படம் வெளியாவதற்கு முன்னர் தனது மகள் சவுந்தர்யாவுடன் ரஜினி அமெரிக்கா சென்று இருந்தார்.

  அப்போது தான் சவுந்தர்யா தான் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொள்ள ரஜினியிடம் அனுமதி கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து ரஜினி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் சவுந்தர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். விஷாகன் மிகப்பெரிய தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார்.

  மேலும் சவுந்தர்யாவை விட வயதிலும் குறைந்தவர். எனவே இது தொடர்பான சிக்கல்களை எல்லாம் பேசி தீர்த்து பிப்ரவரியில் திருமணம் செய்து வைக்க ரஜினி – வணங்காமுடி குடும்பத்தினர் முடிவு செய்து வைத்துள்ளனர். இதனிடையே திருமணத்தை கிராண்டாக நடத்த வேண்டும் என்று சவுந்தர்யா மற்றும் அவரது தாய் லதா விரும்புவதாக கூறப்படுகிறது.

  ஆனால் 2வது திருமணத்தை கிராண்டாக நடத்த ரஜினி யோசிக்கிறார். மேலும் ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் கூட 2வது திருமணத்தை கிராண்டாக நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர். சவுந்தர்யாவுக்கு ஒரு மகன் வேறு இருக்கிறான். அப்படி இருக்கையில் திருமணத்தை கிராண்டாக நடத்துவது சரியாக இருக்காது எனவும் திருப்பதியில் சிம்பிளாக திருமணத்தை முடித்து விட வேண்டும் என்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

  ரஜினியும் கூட தனக்கு திருமணம் நடைபெற்ற திருப்பதியில் வைத்தே மகளுக்கு 2வது திருமணத்தை முடித்துவிடலாம் என்று கருதுகிறார். ஆனால் லதா மற்றும் சவுந்தர்யா இதனை ஏற்கவில்லை. மேலும் உறவினர்களும் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கவே ரஜினி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் சவுந்தர்யா, மருமகன் தனுசு உள்ளிட்டோருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

  இந்த விவகாரத்தில் மாமனானர் ரஜினியின் விருப்பத்தின் படி கோவிலில் சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று தனுசும் கூறி வருகிறார். மேலும் ரஜினிக்கு ஆதரவாகவே அவர் பேசி வருகிறாராம். விரைவில் இந்த பிரச்சனையில் சுமூக முடிவெடுத்துவிட்டே ரஜினி தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.