1 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் வியூவ்ஸ்! மரண மாஸ் காட்டிய ரஜினியின் பேட்ட சிங்கிள்!

வெளியிடப்பட்ட 1 மணி நேரத்துக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்டு யூட்யூப்பி டிரெண்டாகியுள்ளது பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல்.


கார்த்தி சுப்பர ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ரஜினியின் பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. ரஜினியும் பேட்ட படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்த நிலையில் வரும் 9ந் தேதி பேட்ட படத்தின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெற உள்ளது.   இதனை முன்னிட்டு பேட்ட படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் எனும் பாடலை சன் டிவி தனது யூட்யூப் பக்கத்தில் மாலை ஆறு மணி அளவில் வெளியிட்டது. வெளியான சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பேட்ட சிங்கிள் ட்ராக்கை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

   மரண மாஸ் பாடலும் செம குத்துப்பாட்டாக இருந்த காரணத்தினால் மீண்டும் மீண்டும் அதே பாட்டை கேட்க ஆரம்பித்தனர். லிரிக்கல் வீடியோவுடன் அனிருத்தின் இசைக்குழுவும் அவ்வப்போது வருவதால் பாடல் கேட்க மிகவும் சுவாரஸ்யமாகவும் துள்ளலாகவும் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மரண மாஸ் பாடலை மறுபடியும் மறுபடியும் பார்க்க ஆரம்பித்தனர்.   தொடர்ந்து மரண மாஸ் பாடலை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருவதால் யூட்யூபில் மரண மாஸ் டிரென்டானது. அதுமட்டும் அல்லாமல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மர மாஸ் பாடலின் வியூவ்ஸ் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது. அதாவது பத்து லட்சம் முறை இந்த பாடல் மிக குறுகிய நேரத்தில் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்விட்டரிலும் கூட மரண மாஸ் எனும் ஹேஸ்டேக் தான் நம்பர் ஒன் டிரென்டாகியுள்ளது. அதுமட்டும் இன்றி தலைவர் குத்து, பேட்ட ஆகியும் ஹேஸ்டேக்கும் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.


   ஒரு மணி நேரத்திற்குள்ளாக வேறு எந்த படத்தின் சிங்கிள் டிராக்கும் பத்து லட்சம் முறைக்கும் மேலாக பார்த்து ரசிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது- இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த சிங்கிள் டிராக் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.