எடப்பாடி முதலமைச்சரானது அதிஷயம்..! அது போல் நாளையும் நிகழலாம்..! கமல் திரைவிழாவை தெறிக்கவிட்ட ரஜினி!

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் ஆனது அதிசயம் இதுபோல் நாளையும் நிகழலாம் என ரஜினிகாந்த் அதிரடியாக கூறியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் முடிந்ததையொட்டி அதை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் உங்கள் நான் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசை ஞானி இளையராஜா, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல்வேறு தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் கமலை நான் களத்தூர் கண்ணம்மாவில் இருந்து பார்த்து இன்றுவரை பிரமித்து வருகிறேன். அவர் திரையுலகில் நடிகர், இயக்குனர், பாடகர் என்ற பல்வேறு பரிமாணங்களை எடுத்தவர் என்றும் பத்து வேடங்களில் நடித்ததால் அவரை உலகநாயகன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

எங்களுக்குள் கொள்கைகள் சித்தாந்தங்கள் போன்றவற்றில் வேறுபாடு இருந்தாலும் எங்கள் நட்பு என்றும் மாறாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் ஆனது ஒரு அதிசயம்.

அவர் முதலமைச்சர் ஆவார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதுபோல நாளையும் அதிசயம் நிகழலாம் என நடிகர் ரஜினிகாந்த் கமல் விழாவில் அரசியலைப் பற்றி பேசி தெறிக்கவிட்டார்.