மீண்டும் அலெக்ஸ் பாண்டியன்! தர்பார் படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள்!

பேட்ட படத்தின் பெரு வெற்றியை தொடர்ந்து தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியானது. போஸ்டர் வெளியான கையோடு அடுத்த நாள் முதலே மும்பையில் சூட்டிங் ஸ்பாட்டில் தயாரானது.

10ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஷூட்டிங்கிலிருந்து படு ஜோராக நடித்து வந்த சூப்பர் ஸ்டார் பின்னர் 18 ஆம் தேதி சென்னைக்கு வந்து வாக்களித்து விட்டு அடுத்த நாள் மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். மும்பையில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தாண்டி கதையில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ‘மூன்று முகம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் இருக்கும் பொருத்தப்பட்டுள்ளதாம்.  இதன் காரணமாக தர்பார் படத்தில் அலெக்ஸ் பாண்டியனை விஞ்சும் ஒரு போலீஸ் அதிகாரியை நாம் பார்க்கலாம் என்று தெரிகிறது.

மேலும் தர்பார் படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி காட்டும் அலெக்ஸ்பாண்டியன் போலீசாகவும் வலம் வருகிறார் ரஜினிகாந்த். இதனால் தர்பார் படத்தில் ரஜினி என்னென்ன புதுவிதமான மேனரிசங்களை செய்யப்போகிறாரோ என அவரது ரசிகர்கள் பல கனவுகளோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.