அனைத்தையும் இழந்து பரிதவித்து நின்ற சீமான் முன்னாள் காதலி! கேட்ட மாத்திரத்தில் ரஜினி செய்த உதவி! நெகிழ வைத்த சம்பவம்!

பிரபல நடிகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்திருக்கும் சம்பவமானது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகில் பிரண்ட்ஸ் என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய்யின் தங்கையாக விஜயலட்சுமி என்பவர் நடித்திருந்தார்.

இவர் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் நரகத்தில் இருப்பதாகவும் தன்னுடைய கஷ்ட நஷ்டங்களை ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் தெரிவித்து பாரத்தை குறைத்து கொள்ள வேண்டுமென்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோவை வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் என் கஷ்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நான் கேட்டவுடன், அவர் எனக்கு கால் செய்தார். எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். என்னுடைய கஷ்ட நஷ்டங்களை நான் அவரிடம் தெரிவித்தேன். அவர் அவற்றை போக்குவதற்கான தீர்வு முறைகளை எனக்கு கூறினார்.

இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவர் மீதான மதிப்பு 100 மடங்கு உயர்ந்துள்ளது. தலைமைக்குத் தேவையான அனைத்து நற்பண்பும் ரஜினிகாந்திடம் உள்ளது" என்று கூறியிருந்தார். நடிகை விஜயலட்சுமிக்கு சூப்பர்ஸ்டார் அவர்கள் இறங்கி வந்து உதவி செய்திருப்பதற்கு வேறு சில காரணங்கள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கருதுகின்றனர். 

அதாவது 2011-ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்திருந்தார். இதனிடையே விஜயலட்சுமிக்கு உதவியளித்து சீமானை மறைமுகமாக தாக்க வேண்டும் என்பதற்காகவே அவர் உதவி செய்வதாக கூறியுள்ளார். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.