திமுக எம்எல்ஏ மகள் திருமண வரவேற்பு! நேரில் வந்து மணமக்களை வாழ்த்திய ரஜினி!

திமுக எம்எல்ஏ பிச்சாண்டியின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி மணமக்களை வாழ்த்தினார்.


பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மற்றும் திமுக எம்எல்ஏ பிச்சாண்டியின் மகள் திருமணம் கடந்த வாரம் திருப்பதியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நண்பர்களுக்கு கூட மயில்சாமி அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில் மயில்சாமி மகன் - பிச்சாண்டி எம்எலஏ மகள் திருமண வரவேற்பு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மயில்சாமி நடிகர் ரஜினியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மயில்சாமி விடுத்த அழைப்பை ஏற்று நடிகர் ரஜினி நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இதே போல் திமுக எம்எல்ஏ வீட்டு திருமணம் என்பதால் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார். இதே போல் திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.