சூப்பர் ஸ்டாருடன் ஒரே விமானத்தில் சூப்பர் நடிகை! யாருன்னு தெரியுதா? வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் , லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரே விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்துவருகிறார் . இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது .

தர்பார் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஒரே விமானத்தில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளனர் . ஒரே விமானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .