நடிகர் சூர்யாவுக்காக ஒன்று சேரும் ரஜினி - ஷங்கர்! ஏன் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கே வி ஆனந்த் கூட்டணியில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் காப்பான்


திரைப்படத்தின் இசை வெளியீட்டு வருகிற 21ம் தேதி ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மாலை  6  மணிக்கு  கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் இயக்குனர் ஷங்கர் மற்றும் கவிஞர் வைரமுத்துவும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் காப்பான்  படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.

காப்பன் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரச்சனையாகியுள்ள நிலையில் அவரது படவிழாவில் ரஜினி பங்கேற்க உள்ளார்.