ரஜினி எதற்காக பத்திரிகையாளர்களை நேரில் அழைத்தார்..? இதற்குப் பதில் கூப்பிட்டுவைத்து அடித்திருக்கலாமாம்..!

ரஜினி கொடுத்த பிரஸ் மீட் என்பதை எப்படி சொல்வது என்று தெரியாமல் அத்தனை பத்திரிகையாளர்களும் எரிச்சலில் இருக்கிறார்கள்.ஏனென்றால் எல்லோரையும் அன்புடன் வரவேற்று அமர வைத்தார்கள்.


கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்கள் ஆர்வமுடன் குவிந்தார்கள்.வாழ்க்கையில் முதன்முறையாக ரஜினியிடம் கேள்வி கேட்கப் போகிறோம், அதற்கு ரஜினி பதில் சொல்லப்போகிறார் என்றுதான் அத்தனை பேரும் நினைத்தார்கள். அதற்கு ஏற்ப பலரும் கேள்விகளை தயார் செய்து வந்திருந்தார்கள். ஆனால், ரஜினி வந்த வேகத்தில் விறுவிறுவென ஓர் அறிக்கை வாசிப்பது போன்று பேசி முடித்தார். 

ரஜினி இப்படிப்பட்ட அறிக்கைதான் வாசிக்கப்போகிறார் என்றால் அதை வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கலாம். அல்லது வீடியோ பேசி அனுப்பியிருக்கலாம். அதைவிடுத்து எதற்காக எல்லோரையும் கூப்பிட்டு வைத்து பேசினார் என்பது தெரியாமல்தான் தவிக்கிறார்கள்.

இப்படித்தான், அவர் வீட்டு முன் தெருவில் காத்திருக்கும் செய்தியாளர்களிடமும், விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் செய்தியாளர்களிடமும் அவருக்கு மூடு இருந்தால் மட்டும் சில சமயம் பேசுகிறார்.

அதுகூட பரவாயில்லை. இப்படி எல்லோரையும் அழைத்து வைத்து மூக்கை அறுப்பது போல் ஏன் விறுவிறுவென கிளம்பிப் போக வேண்டும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு நிருபரையும் கூப்பிட்டு வைத்து, அவரது ஸ்டைலில் அடித்து அனுப்பியிருக்கலாம் என்று கொந்தளிக்கிறார்கள் தமிழக பத்திரிகையாளர்கள்.

இப்படி கொந்தளிப்பது ஒன்றும் புதிதல்ல, அடுத்து ரஜினியிடம் இருந்து அழைப்பு வரும் வரையிலும் இப்படித்தான் பேசுவார்கள், இந்த பரிதாப ஜென்மங்கள்.