2021ல் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிசயத்தையும் அற்புதத்தையும் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்! ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

2021ல் அரசியலில் அற்புதத்தையும் அதிசயத்தையும் தமிழ்நாட்டு மக்கள் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.


கோவாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியில் கோவாவில் தனக்கு கிடைத்த விருதை தமிழ் மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கமல்ஹாசனுடன் இணைவேன் என்று கூறினீர்களே அப்படி இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய நடிகர் ரஜினிகாந்த், கமல் உடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்பு அந்த முடிவுகளை நான் அறிவிப்பேன் எனவும் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும் தமிழ் மக்கள்  சாதாரணமானவர்கள் அல்ல. நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழக மக்கள் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயம் மற்றும் அற்புதத்தை அரசியலில் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.