அரசியல் பிரவேசம்! மே 23க்கு பிறகு பாருங்க! தெறிக்கவிடும் ட்விஸ்ட் வைத்த ரஜினியின் சகோதரர்!

மே 23க்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும் என அவரது அண்ணன் சத்யநாராயண கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது, மோடிக்கு ரஜினி ஆதரவு தெரிவிக்கவில்லை என்றார். எனது சகோதரர் ரஜினி, பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை மட்டும் ஆதரிக்கிறார். 

மே 23ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அதன்  பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வந்தால் அதையும் ரஜினி எதிர்கொள்வார்.

ரஜினி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ஆகியோரது நட்பு தொடர்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அந்த நட்பில் பிரச்சனை வராது. இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.