ரஜினி யாரிடம் வட்டிக்குப் பணம் கொடுத்தார்..? ரஜினியை ஏமாற்றியவரை அவரது ரசிகர்கள் சும்மா விடலாமா?

கோடிக்கணக்கான ரூபாய் வட்டிக்கு விட்டதில், பலர் ஏமாற்றிவிட்டதாக ரஜினிகாந்த் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இன்னமும் யாரும் உதவி செய்யவில்லை என்பதுதான் அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாம்.


அதனால், உடனடியாக தமிழக அரசு ஒரு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும். அந்த கமிஷனில் ரஜினியை ஆரம்ப காலத்தில் இருந்து ஏமாற்றியவர்கள் யார்? பணத்தைத் திரும்பப் பெற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,. தர்பார் படத்துக்கு ரூ. 100 கோடிக்கு மேல் ரஜினிக்கு கொடுத்ததாக லைகா சொல்லியுள்ளதை சட்டப்படி குற்றமாக கருத வேண்டும். ஏனென்றால், ஆணிடம் வெளிப்படையாக சம்பளம் கேட்கக் கூடாது. இதை மீறியதற்காக லைகாவுக்கு தடை போட வேண்டும்.

கமிஷன் அமைக்கப்பட்டும் ரஜினிக்கு பணம் தரவில்லை என்றால், உடனடியாக ரசிகர் மன்ற கண்மணிகளிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். பின்னே ஆன்மிக அரசியல் பண்றதுன்னு சும்மாவா?