திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று நடிகைகளுக்கு கட்டளை போடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம், ரஜினி வீட்டில் உல்டாவாக விவகாரம் நடந்துள்ளதாம்.
கல்யாணத்துக்குப் பிறகு விசாகன் நடிக்கக்கூடாது! ரஜினி கட்டளையால் டென்ஷன் சௌந்தர்யா
சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுத்தி வருபவர் விசாகன். பணத்தால் சினிமாவில் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. சினிமாவில் கிடைத்த நட்பு வட்டாரம் மூலம்தான் சௌந்தர்யாவின் நட்பு கிடைத்து, அது திருமணம் வரைக்கும் போயுள்ளது.
விசாகன் குடும்பப் பின்னணியை அறிந்ததும் ரஜினி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். மிகவும் சிம்பிளாக திருமணத்தை நடத்தத்தான் ரஜினி ஆசைப்பட்டார். ஆனால், லதா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார். ரகசியமாக திருமணம் முடித்தால் பெற்றோர் ஆசிர்வாதம் இல்லை என்ற பேச்சு கிளம்பும். அதனால் நாமே நடத்திவைக்கலாம் என்று வலியுறுத்தினார்.
சௌந்தர்யாவும் தனது இரண்டாம் கல்யாணம் வெளிப்படையாக பிரமாண்டமாக நடக்கவேண்டும் என்றே ஆசைப்பட்டார். அதனாலே பெரிய அளவில் கல்யாண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வேறு வழியே இல்லாமல் தமிழக முதல்வர்கள், ஸ்டாலின், திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன் என்று சகல கட்சிக்காரர்கள் வீட்டிலும் போய் ரஜினி நிற்க வேண்டிய நிலை உருவானது.
ஒருவழியாக திருமணம் எதிர்பார்த்தபடி தடபுடலாக நடந்து முடிந்துவிட்டது. திருமணத்துக்குப் பிறகு நடைபெற்ற ஒரு விஷயம் ரஜினியை டென்ஷனாக்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது விசாகனை கதாநாயகனாக வைத்து சௌந்தர்யாவின் இயக்கத்தில் சொந்தப் படம் தயாரிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டதாம்.
இந்தத் தகவல் தெரியவந்ததும் ரஜினி கொந்தளித்துவிட்டாராம். சினிமாவையும் குடும்பத்தையும் ஒருபோதும் கலக்கவே வேண்டாம். அவர் தொழிலதிபர் என்பதாலே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன். விசாகன் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தில் சௌந்தர்யா ரஜினி சொன்னதை ஏற்கவில்லை.
ஊருக்குப் போய் வந்தபிறகு இதுகுறித்துப் பேசிக்கொள்ளலாம் என்று சௌந்தர்யாவும் விசாகனும் இப்போது ஹனிமூன் பயணமாக வெளிநாட்டுக்குப் போயிருக்கிறார்கள். சௌந்தர்யா திரும்பிவந்ததும் புதுப்படம் குறித்து அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று சொல்கிறார்கள்.
ரஜினி சொன்னதை சௌந்தர்யாவும் விசாகனும் கடைப்பிடிப்பார்களா என்பதை விரைவில் அறிந்துகொள்ளலாம்.