அம்பானி மகள் திருமணம்! ரஜினிக்கு மட்டும் வந்த ஸ்பெசல் இன்விடேசன்!

இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணத்திற்கு தமிழகத்தில் இருந்து அழைக்கப்பட்ட வெகு சிலரில் நடிகர் ரஜினி குடும்பமும் ஒன்று என்பது தெரியவந்துள்ளது.


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் – இந்திய அளவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கும் ஆனந்த் பிராமலுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் சடங்குகள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அரண்மனையில் இரண்டு நாட்கள் நடைபெற்றன.   அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, உலகப் புகழ்பெற்ற பாப் இசை பாடகி பியான்சே உள்ளிட்ட பிரபலங்களுடன் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும், பெரும் தொழில் அதிபர்களும் இந்த சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நாளை இஷா அம்பானிக்கும் – ஆனந்த் பிராமலுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.  திருமணத்திற்கு மிகப்பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மிக மிக சொற்பமான நபர்களுக்கு மட்டுமே அம்பானி குடும்பம் அழைப்பு விடுத்துள்ளது. உலகத் தலைவர்கள் மட்டும் இன்றி இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்களுக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

   தமிழகத்தை பொறுத்தவரை அம்பானி தன்னுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருப்பவர்களை திருமணத்திற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தையும் அம்பானி தனது மகள் திருமணத்திற்கு அழைத்துள்ளார். இதற்காக ஸ்பெசல் இன்விடேசன் ரஜினிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே தனது  பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இருக்காமல் ரஜினி மும்பை சென்றுள்ளார்.    அம்பானியின் சிறப்பு அழைப்பை ஏற்று குடும்பத்துடன் மும்பை சென்றுள்ள ரஜினி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்ப உள்ளார். அம்பானியின் மகள் திருமணத்திற்கு ரஜினிக்கு வந்த ஸ்பெசல் அழைப்பை அறிந்து அவரது ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.