8 லாரி! 2 லட்சம் லிட்டர்! வட சென்னை தாகத்தை தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்!

வட சென்னை பகுதிகளில் தண்ணீர் தட்டுபாட்டை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் தினமும் இலவசமாக தண்ணீர் வழங்கி அசத்தல்.


கோடை வெயில் துவங்கினாலேயே வழியெங்கும் கலர் காலி குடங்கள் பார்க்காமல் இருக்க முடியாது அதிலும் இந்த வருடம் மட்டும் விதிவிலக்கில்லை, எங்கு திரும்பினாலும் தண்ணீர் கேட்டு மக்கள் சாலை மறியல் .இந்த நிலையில் தான் களத்தில் இறங்கி ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவசமாக லாரிகளில் தண்ணீர் கொடுத்து  அசத்திவருகின்றனர்.

இதற்காக திருவள்ளூர் உள்ளிட்ட  நீர் வளம் மிக்க  பகுதிகளில் இருந்து லாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து குடிநீர் வாங்கி வந்து பொதுமக்கள் எத்தனை குடம் வேண்டுமானாலும் தண்ணீர் பிடித்து கொள்ளலாம் என்று இலவசமாக தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.

சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 3 பெரிய லாரிகள் முதல் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 க்கும் மேற்பட்ட சிறிய டேங்கர் லாரிகள் வரை கிட்டத்தட்ட 2 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்து வருவகின்றனர்

ரஜினி காந்த் அரசியலுக்கு வரும் முன்னதாகவே இது போன்ற சினிமா பானியில் மக்கள் மனதை கவரும் செயல்களில் மன்றத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.