பாய்காட் கோமாளி! நெகடிவ் பப்ளிசிட்டி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்! அகில இந்திய அளவில் பிரபலமான ஜெயம் ரவி!

ஜெயம்ரவியின் புதிய திரைப்படமான கோமாளி திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.


ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் கோமாளி. இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே இதனை ஒரு மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ் .ரவிக்குமார் காமெடி நடிகரான யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

இந்த 2 நிமிடங்கள் கொண்ட  கோமாளி திரைப்படத்தின் டிரெயிலர் இல் ஜெயம் ரவி , ஒரு கோமா நோயாளியாக வலம் வருகிறார். சுமார் பதினாறு வருடங்கள் கழித்து அவர் மீண்டும் கோமாவிலிருந்து நினைவுக்கு திரும்புவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன .  

கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவி இது எந்த ஆண்டு என்று தன்னுடைய நண்பர் யோகிபாபு உடன் கேட்கிறார்..

அதற்கு யோகிபாபு இது 2016 என்கிறார் ஆனால் ஜெயம் ரவி அதை நம்பவில்லை. அப்போது யோகிபாபு அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ரஜினிகாந்தின் பேட்டியை காண்பித்து இதோ பார் இது 2016 தான் என்று காட்டுகிறார்.

இந்தப் பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் . இதனை பார்த்த ஜெயம் ரவி இது   1996 தான் என்று கூறுவார் . காரணம் இந்த டயலாக்கை நடிகர் ரஜினிகாந்த் 1996 தான் கூறினார் என்று யோகி பாபுவிடம் வாதிடுவார். 

இந்த டயலாக்  ட்ரெய்லர்  இறுதியில் இடம்பெற்றிருக்கும்.  இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் பலரும் இந்த டயலாக் பேசிய ஜெயம் ரவி மீது மிகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமில்லாமல் #boycottcomali  என்ற ஹேஸ்டேக் மூலம் இந்த திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்பட குழுவினரிடம் இந்த இந்த ரஜினியை கிண்டல் அடிக்கும் இந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் ரஜினியின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

#boycottcomali எனும் ஹேஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டானது. இதனை தொடர்ந்து ஏன் இந்த ஹேஸ்டேக் டிரண்டானது என்று இந்திய அளவில் பலரும் தேடிய நிலையில் அதற்கு காரணம் ஜெயம் ரவி தான் என்று தெரியவர அவரை குறித்து தற்போது தேடி வருகின்றனர்.