தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை ரஜினி நிச்சயம் பூர்த்தி செய்வார்! ரஜினி சகோதரர் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக பூர்த்தி செய்வார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறியுள்ளார்.


2017 ஆம் ஆண்டு ரசிகர்களிடையே பேசும்போது நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். பின்னர் ரஜினியின் ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கான நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

ஆனாலும் ரஜினிகாந்த் எப்பொழுது கட்சியை ஆரம்பித்து முறைப்படி அரசியலில் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பெரிதாக நிலவி வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் தமிழகத்தில் நல்ல ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இவரின் இந்த கருத்தானது மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடம் தீயாய் பரவியது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் சத்தியநாராயணா அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மீது மக்களுடைய எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. 

தனக்கென்று ஆசைப்படாமல் மக்களுக்காக நல்லது செய்யும் உள்ளம் கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த் எனவும், மேலும் நடிகர் ரஜனிகாந்த் கண்டிப்பாக மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வார் எனவும் அவரது அண்ணன் சத்யநாராயணா கருத்து தெரிவித்துள்ளார்.