ரஜினி பிறந்த நாள் ஸ்பெசல்! வெறி பிடித்த ரசிகர்களுக்கே தெரியாத ரஜினியின் சாதனைகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது வெறி பிடித்த ரசிகர்களுக்கே தெரியாத பல விஷயங்கள் இந்த கட்டுரையில்.


கொத்தனார் வேலை, ஆபிஸில் பியூன் வேலை, மூட்டை தூக்கும் கூலி வேலை என பல துறைகளில் வேலை செய்து கஷ்டப்பட்ட பின்பு தான் கண்டக்டர் வேலை கிடைத்தது

ரஜினி என்னும் வில்லன் நடிகரை ஹீரோவா போட்டு பைரவி படம் எடுக்க போகிறேன் என்று கலைஞானம் சொன்னபோது பைனான்ஸ் பண்ண மாட்டேன் என விலகினார் தயாரிப்பாளர் தேவர் (பிலிம்ஸ்). ஆனால் தேவர்பிலிம்ஸ் நஷ்டப்பட்ட பிறகு தேவர் பிலிம்ஸ் கடைசியாக எடுத்த படம் தர்மத்தின் தலைவன். அதில் சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்து அவர்களை நெகிழ வைத்தார். பிறகு தன் மகள் சவுந்தர்யா திருமணைத்தின் போதும் தேவரின் மகளுக்கு நிறைய பொருளதவி செய்தார்.1978 Solo ஹீரோவாக ரஜினி நடித்த படம் முதன் முறையாக 125 நாட்களுக்கு மேல் ஓடியது முள்ளும் மலரும் தான். சென்னையின் அப்போதைய A/C பெரிய தியேட்டர் அலங்காரில் 100 நாள் ஓடிய முதல் படம். இப்படம் அப்போதே மறுவெளியீட்டிலும் மாஸாக ஓடியது.

1978 பைரவி படத்திற்கு முன்பு விஜயகுமார் ரஜினி என்று வந்த பட விளம்பரங்கள் பைரவிக்கு பிறகு ரஜினி விஜயகுமார் என ஆனது வைத்தே திரையுலகில் அவர் வளர்ந்த வேகத்தை கணக்கிடலாம்

1974 - 1975 சென்னை Film Institute-ல் சேரும் முன்பே கையில் இருந்த பணம் செலவடைந்ததால் இருக்க இடமில்லாமல் அண்ணாசாலை ப்ளாட்பாரத்தில் படுத்துறங்கியவருக்கு காவல் துறையினரால் மேலும் பல துயரங்கள் சந்திக்க நேர்ந்தது

1991 தளபதி படம் தொடங்கி 2018 2Point0 படம் வரை தமிழ் சினிமாவில் ரஜினி படம் வெளியான ஆண்டுகளில் வெற்றியோ தோல்வியோ வசூலில் அவர் படமே முதலிடம். Rajini படம் வெளியாகத ஆண்டுகளில் தான் மற்றவர்கள் No.1, No.2 என சின்ன பசங்க விளையாட்டு ஆடுகிறார்களே தவிர என்றுமே அவர் தான் சூப்பர் 1.

1980களில் 1 லட்சத்து 25ஆயிரம் என ரஜினி பட பாடல் கேஸட் விற்பனையில் ரெக்கார்டு செய்தது. 90களில் 7 லட்சம் பட பாடல் கேஸட்டுகள் படையப்பாவுக்காக விற்பனையாகி சாதனை செய்தது. 2000களில் சிவாஜி பட பாடல் சிடிக்கள் லட்சக்கணக்கில் விற்பனையில் சாதனை செய்தது.

பெரிய வெற்றி கண்டிராத அஜீத் என்னும் சாதாரண நடிகரின் காதல் கோட்டை  படம் பார்த்து அப்போது அவரை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து  பாராட்டிய முதல் ஆள் ரஜினி தான். பாட்ஷா, முத்து என உச்சத்தில் இருந்தபோதே புதிய கலைஞர்களை பாராட்டி வந்தவர்

சென்னை நகரில் 3 வாரங்களில் 1 கோடி வசூலை எட்டிய முதல் படம் படையப்பா.

ஒரு திரையரங்க (மாயாஜால்) காம்ப்ளக்ஸில் 2 வாரங்களில் 300+ ஹவுஸ்புல் காட்சிகள் என மிக பெரிய ஒப்பெனிங் காண்பிக்கப்பட்டது ரஜினியின் சிவாஜி படத்திற்கு தான். மாயாஜாலில் இன்றும் சாதனை மேல் சாதனையாக ரஜினி படம்.25 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ் படம் பாட்ஷா. 50 கோடி வசூல் தாண்டிய முதல் தமிழ் படம் சந்திரமுகி.100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் சிவாஜி.200 கோடி வசூலை தாண்டிய முதல் தமிழ் படம் எந்திரன். இன்று எல்லாவற்றையும் தாண்டி நம் நடிகர்கள் தற்போதைக்கு நினைக்க முடியாத 500 கோடி வசூல் 2.0


நன்றி: ட்விட்டர் ரெக்கார்ட்ஸ்