ரஜினி என்ன சொல்றார்? மோடிக்கு ஓட்டு போடச் சொல்றார்! அதிர்ச்சியில் ரஜினி மன்ற நிர்வாகிகள்!

ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்ததும், வழக்கம்போல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் போன மன்றச் செயலாளர்கள், நொந்து நூடுல்ஸாகத் திரும்பியிருக்கிறார்கள்.


செளந்தர்யா திருமணத்துக்கு ரஜினி மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டுமாவது அழைப்பு வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், வழக்கம்போல் அவர் யாரையும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் திடீரென மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு கொடுத்தார் ரஜினி.

உடனே அத்தனை மாவட்டச் செயலாளர்களும் ஓடோடி வந்தனர். ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீட்டிங், அவரது வீட்டுக்கு மாற்றப்பட்டது. உடனே நிர்வாகிகளுக்கு கூடுதல் சந்தோஷம். ஆனந்தத்துடன் போய்ச் சேர்ந்தார்கள்.

நிர்வாகிகளைப் பார்க்கும்போதே கையில் அறிக்கையுடன் வந்தார் ரஜினி. யாரையும் எதுவும் பேசவிடவில்லை. அறிக்கையைப் படித்தார். தமிழகத்துக்கு மிகப்பெரிய அளவில் தண்ணீர் பிரச்னை வரப்போகிறது, அதை தீர்ப்பதற்கு எந்தக் கட்சி உறுதி அளிக்கிறதோ, அதற்கு மட்டும் ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னார்.

நிர்வாகிகள் எவரையும் பேசவிடாமல், ‘2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாம் கட்சி ஆரம்பிப்பது குறித்துப் பேசலாம். நாம் ஆறு மாத காலம் வேலை பார்த்தால் போதும். அதுவரை கட்சி பற்றி பேச வேண்டாம்’ என்று அனுப்பிவிட்டார்.

அம்புட்டுத்தான் நடந்தது. இதை அறிவிப்பதற்கு எதற்காக எங்களை வரச்சொல்ல வேண்டும் என்று குமுறுகிறார்கள் நிர்வாகிகள். ஏற்கெனவே தயார் செய்த அறிக்கையைப் படித்துக் காட்டுவதற்கு நாங்கள் எதற்கு? கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எதற்காக தண்ணீர் பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதற்கு காரணம் இருக்கிறது.

நதிநீர் இணைப்பு என்பதுதான் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் மறைமுகமாக எங்களை பி.ஜே.பி.க்கு வேலை செய்யுங்கள் என்று சொல்லத்தான் கூப்பிட்டிருக்கிறார் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருன்னா சும்மாவா…? நீங்களே வேணும்னாலும் அந்த அறிக்கையை படித்து பாருங்கள்