சசிகுமாரை ரஜினி ரசிகர்கள் மிரட்டுறாங்களாம்...

ரஜினி தொடர்ந்து நடிக்கவேண்டும் என்று சசிகுமார் பேசினார். அதனை ரஜினி ரசிகர்கள் விரும்பவில்லை என்பதால் பிரச்னை பெரிதாகியிருக்கிறது.


பிரமாண்டமாக நடைபெற்ற பேட்ட இசை வெளியீட்டு விழாவில்விஜய் சேதுபதிஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்இசை அமைப்பாளர் அனிரூத்சன் டி.விமாறன்த்ரிஷாமாளவிகா போன்ற பலரும் கலந்துகொண்டனர்இந்த விழாவில் விஜய் சேதுபதியின் நடிப்பை ரஜினிகாந்த் ஏகமாகப் புகழ்ந்து தள்ளினார்சின்ன வயசில் ரஜினியைப் பார்த்தது போலவேஇப்போது விஜய் சேதுபதி இருக்கிறார் என்று பலரும் புகழ்ந்து பேசினார்கள்.


இந்த விழாவில் நடிகரும்இயக்குனருமான சசிகுமார் பேசிய பேச்சுதான் இப்போது அவருக்கு வில்லங்கமாகி வருகிறதுஇத்தனைக்கும் அவர் ரஜினியை பாராட்டித்தான் பேசினார்நான் ரஜினி சாரோட ரசிகன்முதல் நாள்முதல் ஷோ பார்க்கும் ரசிகன்அவரை அண்ணாந்து பார்த்தவன்அவ்ளோ உயரத்துல இருக்கிற சூப்பர் ஸ்டாரோட நானும் நடிச்சிருக்கேன்னு நினைக்கும்போதே பெருமையா இருக்கு.ன்னு நிறைய பாராட்டிப் பேசினார்.


கடைசியாரஜினி சாருக்கு ஒரேயொரு வேண்டுகோள்நீங்க நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்கணும்அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும் என்று சொன்னார்அப்படி சொன்னதுதான் இப்போது சசிகுமாருக்கு வில்லங்கமாக மாறியிருக்கிறது. ஆம், ரஜ்னி ரசிகர்கள் அனைவரும் அவரை அடுத்த தமிழக முதல்வராக பார்த்து வருகிறார்கள். ஆனால், அவரை தொடர்ந்து நடிக்குமாறு சசிகுமார் அழைக்கவே கோபமாகியிருக்கிறார்கள்.
எங்க தலைவர் அரசியலுக்கு வருவாருன்னு நாங்க எல்லோரும் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கோம்நீங்க அவரை தொடர்ந்து நடிக்கச் சொன்னா என்ன அர்த்தம் என்று ஒரு ரசிகர் போன் செய்து கேட்டிருக்கிறார்அதற்கு சசிகுமார்என்னுடைய ஆசையைத்தான் சொன்னேன் என்று அவரிடம் பதில் சொன்னாராம்அம்புட்டுத்தான்.


வரிசையாக ரஜினி ரசிகர்கள் அவருக்கு போன் செய்து திட்டி வருகிறார்களாம்நாங்கள் ஊர் ஊராகப் போய் ரஜினி மன்றத்துக்கு ஆட்கள் திரட்டிதேர்தலுக்குத் தயாராகி வருகிறோம்உனக்கு ரஜினியுடன் நடித்தால் பெயர் வரும் என்பதற்காக எங்கள் ஆசையில் மண்ணள்ளிப் போட வேண்டாம்ரஜினி வந்தால்தான்தமிழகம் உருப்படும் என்று கொந்தளிக்கிறார்களாம்.

ஆழம் தெரியாமப் பேசிட்டோமோ என்ற் சசிக்குமார் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கிடக்கிறாராம். இந்த விவகாரத்தை ரஜினியிடம் அல்லது அவரது மன்றத்தினரிடமும் கொண்டுபோக யோசிக்கிறார். ஏனென்றால், சம்பந்தப்பட்ட ரஜினி ரசிகர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது அவர்களுக்கு நல்லதில்லை என்று யோசிக்கிறாராம்.


தொடர்ந்து இதுபோன்று யாராவது திட்டிக்கொண்டிருந்தால் தலைவரிடம் சரண்டர் ஆவது தவிர வேறு வழியில்லை என்கிறார் சசிகுமார். ஆனால், ரஜினி ரசிகர்களோ, அப்படி யாருமே சசிகுமாரை திட்டியது இல்லை, திட்டவும் மாட்டார்கள். அவரே பப்ளிசிட்டிக்காக எதையாவது சொல்லி, எங்கள் மீது பழி போடுகிறார் என்கிறார்.

அப்படியாப்பூ..?