ராஜஸ்தானை வெற்றி பெற வைத்த 17வயது இளம் வீரர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் தினேஷ் கார்த்திக் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 18வது ஓவர் வரை நிதானமாக ஆடினார்.

கடைசி 2 ஓவரில் தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கதி கலங்க செய்தார். இவர் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97ரன்களை சேர்த்து கொல்கத்தா அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார்.ராஜஸ்தான் அணியின் வருண் ஆரோன் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி பெற செய்தார். 17 வயதான இவர் சிறு வயதிலே பொறுப்புடன் விளையாடியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடைசியில் களமிறங்கிய ஆர்ச்சேர் 12 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.