IPL போட்டியில் ODI போல மந்தமாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 140 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் சார்பில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆகாமல் 73 ரன்களை  எடுத்தார். ஜோஸ் பட்லர் 37 ரன்களை சேர்த்தார்.கொல்கத்தா அணியின் குர்னே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை எடுத்தார்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சேஸ்  செய்து வருகிறார்கள்.