2 வருடங்களுக்கு முன் உயிரிழந்த மகன் விந்தணு மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பாட்டி ஆன ராஜஸ்ரீ..! அதிசயம் ஆனால் உண்மை..!

புனேவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த மகன் ஒருவரின் விந்தணு மூலம் ராஜஸ்ரீ என்பவர் இரட்டை குழந்தைகளுக்கு பாட்டி ஆகி இருக்கிறார்.


பிரதமேஷ் பாட்டீல் என்பவர் புனேவை சேர்ந்தவர். இவரது தாயார் பெயர் ராஜஸ்ரீ. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமேஷ் ஜெர்மனிக்கு படிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அங்கு சென்றவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கீமோதெரபி செய்ய மருத்துவர்கள் முன்வந்துள்ளனர். உரிய சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கிருந்த மருத்துவர்கள் பிரதமேஷின் விந்தணுக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேகரித்து உள்ளனர். இதனையடுத்து அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஜெர்மனியில் இருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். 

ஆனால் பிரதமேஷ் சிகிச்சை பலனின்றி புற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ராஜஸ்ரீ , தன்னுடைய வாழ்விற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆகையால் தன்னுடைய மகன் பிரதமேஷ் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு போன் செய்து அவரது விந்தணுக்களை பற்றி தகவல் சேகரித்திருக்கிறார். பின்னர் அவர்களிடம் பேசி விந்தணுக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருக்கிறார்.

அங்கிருந்து கொண்டு வரப்பட்ட தன்னுடைய மகனின் விந்தணுக்களை புனேவின் சஹ்யாத்ரி மருத்துவமனையின் மருத்துவர்கள் இடம் அளித்திருக்கிறார். அந்த மருத்துவமனை மருத்துவர்கள் பிரதமேஷ் இன் விந்தணுக்களை

விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) செயல்முறையைச் செய்து வாடகைத்தாய் ஒருவரின் அனுமதியோடு உடலில் செலுத்தி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் பிரதமேஷ் பாட்டிலின் விந்தணுக்களைக் கொண்டு கருத்தரித்து இருக்கிறார். தற்போது அந்த வாடகை தாய் மூலம் ராஜஸ்ரீக்கு 2 பேர குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு இரட்டை குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து உள்ளன. 

தன் மகன் இந்த உலகில் இல்லை என்றாலும், அவர் மூலம் கிடைத்த இந்த இரண்டு குழந்தைகள் ராஜஸ்ரீயின் வாழ்வின் அர்த்தமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.