என் வாழ்க்கையே போச்சு! ராஜா ராணி ரித்திகா கதறல்! பதற வைக்கும் காரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் டிக் டாக் பிரபலம் ரித்திகாவை வாலிபர் ஒருவர் ரித்திக்காவை காதலிப்பதாகவும் தனக்கும் ரித்திகாவுக்கும் திருமண செய்துவையுங்கள் என்றும் சண்டையிட்டுள்ளார்.


இதுக்குறித்து ரித்திகாவிடம் கேட்டபோது 'இந்தச் செய்தியை நீங்க எப்படி நியூஸ் பார்த்து தெரிஞ்சுகிட்டீங்களோ நானும் அப்படித்தான் தெரிஞ்சுகிட்டேன்' என்றார்.பத்திரிக்கையாளர் ஒருவர் தான் வடபழனியில் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த செய்தியை கூறினார். காவல்துறையினரிடம் அந்த வாலிபர் தன் புகைப்படத்தை காட்டியுள்ளார் என்பது தெரிய வந்தது.

ஆனால் ஒரு பெண்ணின் புகைப்படம் மற்றும் அவள் குடும்பத்தினரின் பெயரும் நியூஸ் பேம்பரில் போடுவதற்கு முன்பு கிராஸ் செக் செய்திருக்க வேண்டும் என்று ரித்திக்கா கண்டித்துள்ளார்.கிராஸ் செக் செய்திருந்தால் இந்தச் செய்தியை படிச்சவர்களுக்கு தெளிவு ஏற்பட்டிருக்கும். அதை விடுத்து கிராஸ் செக் செய்யாமல் போட்டதால் எனது வாழ்க்கையே தற்போது போகும் நிலையில் உள்ளது.

இவ்வாறு ரித்திகா கதறியபடி கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய விளக்கத்தையும் உடனடியாக ஊடகங்கள் வெளியிட்டதால் சிறிது நிம்மதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.