மூன்றே மாசத்தில் முழுகாம இருக்கும் ராஜா ராணி செம்பா..! ஒரே வாந்தி வேறயாம்..!

ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆலியா மானசா தற்போது கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஜா ராணி சீரியல் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாவது பாகத்திலும் இதே ஜோடி நடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படிப்பட்ட எந்த ஒரு தகவலும் வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இவர்கள் இருவரின் திருமண செய்தி இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை உண்டாக்கியது. இந்த ஜோடி யாருக்கும் தெரியாமல் கடந்த செப்டம்பரில் ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் மற்றும் மானசா தம்பதியினர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பிகில் திரைப்படத்தில் வரும் வெறித்தனம் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார் நடிகர் சஞ்சீவ்.

நடனமாடி முடித்தபின் நடிகர் சஞ்சீவ் அதே மேடையில் தன்னுடைய மனைவி ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கும் தகவலை தன்னுடைய ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். அதாவது திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். மேலும் இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.