திருமணமாகி இரண்டே மாதம்..! அதுக்குள் வீட்டில் விசேஷம்..! அடிச்சி தூக்கிய செம்பா - சின்னய்யா!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் நடித்தவர் நடிகை ஆலியா மானசா . இவர் தன்னுடன் அந்த சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து வந்தார். 

இவர்களது காதலுக்கு வீட்டு பெரியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் . இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணம் நடைபெற்ற சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக வலைதளத்தின் மூலம் தங்களின் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

 இந்த ஜோடிக்கு வாழ்த்துச்செய்தி சமூகவலைதளத்தில் குவிந்த வண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருமணமாகி இரண்டு மாதமாக ஆலியா மற்றும் சஞ்சய் தம்பதியினர் தற்போது புதியதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளனர் . அந்த வீட்டு கிரகப்பிரவேசம் தற்போது நல்ல முறையாக நடந்து முடிந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தங்களது வாழ்த்துச் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.