யார் அழைத்தாலும் வருவேன்! மொபைல் எண்ணை வெளியிட்ட ராஜா ராணி செம்பா!

யார் அழைத்தாலும் வருவேன் என்கிற ரீதியில் ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்து வரும் அல்யா மனாசா தனது செல்போன் எண்ணை வெளியிட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.


   குரூப் டான்ஸ் ஆடும் பெண்களில் ஒருவராக இருந்தவர் அல்யா மனாசா. பின்னர் தனது காதலன் மூலமாக கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு அல்யாவுக்கு கிடைத்தது. இதன் பிறகு ஓரளவு பிரபலமான அல்யா, மேடை ஏறி ஆட்டம் ஆடும் டான்சராக இருந்து வந்தார். குலசேகரப்பட்டினம் கோவில் விழாவில் தெருவில் வைத்து அல்யா போட்டகுத்தாட்டம் தற்போது வரை யூட்யூபில் செம பிரபலம்.

   ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் நாயகி ஆனார் அல்யா. இதன் பிறகு தான் அவர் வாழ்வே மாறிப்போனது. தற்போது விஜய் டிவியின் அடையாளங்களில் ஒருவராக அல்யா திகழ்கிறார். வளர்ச்சி அடைந்த பிறகு காதலனை கழட்டிவிட்டு ராஜா ராணி சீரியலில் தனது கணவராக அதாவது சின்னய்யாவாக நடித்து வரும் ராஜீவுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார் அல்யா.

   அதுமட்டும் அல்லாமல் விளம்பர படங்களிலும் அல்யாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுவும் ராஜா ராணி செம்பா என்கிற பெயரில் அல்யா விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சென்னையில் மிகப்பெரிய வணிக நிறுவனமான சரவணா ஸ்டோஸ்சின் மாடல்களில் ஒருவராக இருக்கிறார். ஏற்கனவே சரவணா ஸ்டோர்சின் மாடலாக இருந்த ஸ்நேகாவை பின்னுக்கு தள்ளி தற்போது செம்பா தான் முன்னணியில் உள்ளார்.

   இதுதவிர இந்திய அளவில் பிரபலமான டெய்ரி மில்க் சாக்லேட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் செம்பாவை தேடி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் லோக்கல் விளம்பரமாக இருந்தாலும் காசு கொடுத்தால் போதும் என்று செம்பா ஒப்புக் கொண்டு வருகிறார். இதற்கிடையே செம்பாவை விளம்பர படங்களில் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை, அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று புரியவில்லை என விளம்பர நிறுவனங்கள் தகவல்களை கசியவிட்டன.

   இதனை அடுத்து முதல் வேலையாக தனக்கு மேனேஜர் என்று ஒருவரை நியமித்துள்ளார் செம்பா. அதுமட்டும் அல்லாமல் அந்த மேனேஜரின் செல்போன் எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இனி தன்னை யாராவது எதற்காவது அழைக்க வேண்டும் என்றும் மேனேஜரை கூப்பிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். எதற்கு அழைக்க வேண்டும் என்று எல்லாம் செம்பா, குறிப்பிடவில்லை, அழையுங்கள் வருகிறேன் என்று மட்டுமே கூறியுள்ளார்.   

   இது சர்ச்சையானதை தொடர்ந்து விளம்பரங்கள், நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தன்னை  அழைக்குமாறும், அதற்கு தனது மேலாளர் ராகுலை தொடர்பு கொள்ளுமாறும் கூறி செல்போன் எண்ணை வெளியிட்டுள்ளார் செம்பா. ஏற்கனவே ஏராளமான விளம்பரங்களில் செம்பா நடித்து வரும் நிலையில் மேலாளர் வேறு நியமிக்கப்பட்டுள்ளதால் நிறைய விளம்பரங்களில் இனி செம்பாவை பார்க்கலாம்.