விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்த அல்யா மனாசா தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
முஸ்லீம் மதத்திற்கு மாறிய விஜய் டிவி ராஜா ராணி சீரியல் செம்பா! கலிமா சொல்லும் வைரல் வீடியோ!
இது தொடர்பாக அல்யா மனாசாவை முஸ்லீமாக மாற்றிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட விஜய் தொலைக்காட்சி நடிகை கலிமா சொல்லி கொடுத்தINTJ துணை தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது-
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடரில் நடித்த ஆலியா மானஷா இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார் அவருக்கு சத்திய கலிமாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சொல்லி கொடுத்த வீடியோ என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டள்ளனர்.
அண்மையில் ராஜா ராணி செம்பா தனது காதலர் சஞ்சிவை திருமணம் செய்தார். சஞ்சிவ் ஒரு முஸ்லீம். எனவே அவரை கரம் பிடிக்க அல்யா மனாசா தற்போது முஸ்லீமாக மாறியுள்ளார்.