நடுக்காட்டுபட்டியில் திடீர் மழை! மீட்புப் பணியில் பின்னடைவு! சிறுவனை மீட்கும் பணியில் நெய்வேலி சுரங்கப் பணியாளர்கள் தீவிரம்!

நடுக்காட்டுபட்டியில் பரவலாக பெய்து வரும் சாரல் மழையால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டெடுக்கும் பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் இடத்தில் அமைந்துள்ள நடுக்காட்டுபட்டி என்னும் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் இரண்டு வயது சிறுவன் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்காக பலர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் நெய்வேலி சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுவரும் மிகவும் அனுபவம் மிக்க பணியாளர்கள் , நடுக்காட்டு பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக விரைந்துள்ளனர் . அவர்கள் கிணற்றின் உள்ளே விழுந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நேரத்தில் அங்கு சாரல் மழை ஏற்பட்டுள்ளதால் தார்பாய் அமைத்து தண்ணீர் உள்ளே புகாதபடி சில அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து விரைவில் அந்த சிறுவனை கிணற்றிலிருந்து மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை ஊட்டும் வகையில் அந்த குழு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.