பிரபல டி.வி நடிகர் தூக்கு போட்டு தற்கொலை! பதற வைக்கும் காரணம்!

டிவி தொடர்களில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த நடிகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்..


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஐ சேர்ந்த இளைஞர் ராகுல் தீக்ஷித். இவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் மிகப் பெரிய நடிகராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதற்காக மும்பை வந்த அவர் அங்குள்ள பயிற்சிப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தார்.

 

   தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் ஜொலிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு  கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மும்பை ஒஷீவாரா என்ற பகுதியில் தங்கியிருந்த ராகுல் தீக்ஷித் புதன்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

 

   இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீடு முழுவதும் சோதனையிட்ட போலீசாருக்கு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த கடிதங்கள் எதுவும் சிக்கவில்லை.

 

எனவே இதனை விபத்தால் நேர்ந்த மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.   இது தற்கொலையாகவே இருக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

 

இருப்பினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது புதிராகவே உள்ளது. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தனது நண்பர்களுடன் அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த ராகுல் ஒரே நாள் இரவில் எதற்காக தற்கொலை முடிவை தேடினார் என்று அவரது நண்பர்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.

 

   தனது மகன் இறந்த செய்தியை கேள்விப்பட்ட ராகுல் தீக்ஷித்தின் தந்தை, தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை இட்டுள்ளார்.