ரஜினி சொல்லித் தான் அப்படி பேசினேனா? உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்!

நான் டுவிட்டரில் வெளியிட்ட கருத்துக்கள் வெளியிடப்போகும் கருத்துக்கள் மற்றும் நான் பேசிய கருத்துக்கள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இதுவரை நான் பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. சிலர் கூறுகிறார்கள் நான் பேசுற கருத்துக்கள் எல்லாம் ரஜினிகாந்த் சொல்லித்தான் நான் பேசுகிறேன் என்று.

இது சுத்தப் பொய் என்றும் யாரையும் தூண்டி விட்டு பேசக் கூடிய நபர் ரஜினிகாந்த அல்ல என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனது கருத்துக்களால் அவருக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது . ஒரு ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்வது மட்டும்தான் என நடிகர் ராகவா ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

மேலும் நான் எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல. எந்த கட்சியையும் ஆதரிக்கவும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.