சுஜித் சடலத்தை மக்களுக்கு காட்டாதது ஏன்? முதல் முறையாக உண்மையை உடைத்த தமிழக அரசு!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் இன் உடல் முழுவதுமாக மீட்கப்படவில்லை எனவும் சிறுவனின் கைகள் மட்டும்தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என்ற சர்ச்சைக்கு முடிவு கட்டினார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்.


திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு அருகே அமைந்திருக்கும் நடுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் மிகுந்த போராட்டங்களுக்கு பின்பு நேற்றைய தினம் அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக உறவினர்கள் மூலம் சிறுவன் சுர்ஜித் இன் உடல் தகணமும் செய்யப்பட்டது. 

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிளாஸ்டிக் கவரின் மூலம் கவர் செய்யப்பட்டு அதிகாரிகளால் கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சுஜித் இன் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் அவரது கைகள் மட்டும்தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் கூறினர். கைகள் மட்டும்தான் மீட்கப்பட்டது என்பதால்தான் சிறுவனின் உடலை பொது மக்கள் எவருக்கும் காண்பிக்கவில்லை எனவும் செய்தி பரவி வந்தது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று காலை சந்தித்தார். 

செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணனிடம் பல கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டது. அப்போது சிறுவன் சுர்ஜித்-ன் கைகள் மட்டும்தான் எடுக்கப்பட்டதா எனவும் உடலின் சில பாகங்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் இருக்கிறது என்று பலரும் கூறி வரும் இந்த செய்தி உண்மையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன் , சிறுவன் சுஜித்-ஐ மீட்டெடுப்பதற்காக கடந்த 4 நாட்களாக மீட்புக்குழுவினர் தங்களது உயிரையே பணையம் வைத்து வேலை செய்தனர்.

ஆனால் அவர்களைப் பார்த்து எத்தனை இத்தகைய கேள்வி கேட்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று என்று கூறினார். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் விதிமுறைகளின்படி தான் சிறுவனை மீட்க நாங்கள் முயற்சி செய்தோம் அதன்படிதான் மீட்டு எடுத்தோம் . ஆனால் துரதிஷ்டவசமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என்று ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். 

மேலும் பேசிய அவர் குழந்தையின் உடலை காட்டாது அதற்கான காரணத்தையும் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக தீயில் எரிந்து உயிரிழந்தனர். அப்போது தீயில் எரிந்து சடலமாக கிடந்த அந்த குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டமையால் மிகப்பெரிய கேள்விக்கு தாங்கள் உள்ளாகிய தாக திரு ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இதனால் உலகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது என்றும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து மத்திய அரசு இறந்த உடல்கள் சிதைந்து போன நிலையில் எடுக்கும்பொழுது அதனை மீட்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அந்த வழிகாட்டுதலை கருத்தில் கொண்டுதான் சுர்ஜித் என் உடலை தாங்கள் காட்டவில்லை என்று அவர் கூறியிருந்தார்.  

சிறுவனின் உடலை மீட்ட உடன் அவனுடைய உடல் பாகங்கள் அனைத்தும் இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்த பின்புதான் அதனை அடக்கம் செய்தோம். 

குழந்தையின் சில பாகங்கள் மட்டும் தான் நாங்கள் கண்டறிந்து அதனை அடக்கம் செய்தோம் . நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுந்தால் அதனை பற்றிய கேள்வி எழுப்பப்படும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் சிறுவன் சுஜிதை மீட்டெடுக்கும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் குழந்தையின் நிலைமையை பற்றி அவரது பெற்றோரிடம் தகவல் அளித்து வந்தோம். அதுமட்டுமில்லாமல் குழந்தையை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளோம். இருப்பினும் குழந்தையை எங்களால் உயிருடன் மீட்கப்படவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறினார்.