ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிடு! பிஞ்சுக் குழந்தையை கொடுமைபடுத்திய சங்பரிவார் குண்டர்கள்!

பிஞ்சு குழந்தையை ஜெய் ஸ்ரீராம் என்று கூறுமாறு கொடுமைப்படுத்திய வலதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோவானது பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.


கடந்த மே மாதம் வெளியான தேர்தல் முடிவுகளின்படி அறுதிப் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்த உடன் ஹிந்துத்துவா தத்துவத்தை அனைவரும் பின்பற்றும்படி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் சகோதரத்துவம் குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை பெரிதளவில் மேற்கொள்கின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுவோர் கூறும் மொழிகளை சிறுபான்மையினரை கூறவைக்க துன்புறுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மனித நேயமற்ற செயல்களில் வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இன்று வெளியான செய்தி ஒன்று அனைவரையும் நெஞ்சை பதற வைத்துள்ளது. பிஞ்சு குழந்தையை ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வலதுசாரி அமைப்பினை சேர்ந்தவன் வற்புறுத்தியுள்ளான். அந்தக் குழந்தையினால் வாய் பேச இயலாது என்பதை கூட புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு மூடனாக இளைஞன் இருந்துள்ளான்.

குழந்தையின் கழுத்தை நெறிப்பதும், கன்னங்களில் அறைவதுமாக பல்வேறு அநியாய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இவரின் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வருகிறது. https://twitter.com/niranjan2428/status/1152462153359613952