ஒரு வழியா நாங்களும் ஜெயிச்சிட்டோம்! கொண்டாட்டத்தில் கோஹ்லி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பெட்டிங் செய்ய பணித்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய கிறிஸ் கெயில் ஆட்டமிழக்காமல்  64 பந்துகளில் 99 ரன்களை எடுத்து ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சஹால் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி 67 ரன்களை எடுத்தார்.டீ வில்லியர்ஸ் மற்றும் ஸ்டானிஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

டீ வில்லியர்ஸ் 59 ரன்களும் , ஸ்டானிஸ் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு  இலக்கை எட்டியது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.