சன் ரைசர்ஸ் அணியின் பிலே ஆஃப் கனவில் மண்ணை வாரி போட்ட கோஹ்லி அணி!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற RCB அணி முதலில் SRH அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 43  பந்துகளில் 70 ரன்களை விளாசினார்.  மார்ட்டின் குப்தில் 30 ரன்களையும் எடுத்தார். பெங்களூரு அணியின் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியின் முதல்  3 பேட்ஸ்மேன்கள் கோஹ்லி , பார்திவ் படேல், டி  வில்லியர்ஸ் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஹெட்மயேர் மற்றும் குர்கீரத் சிங் அபாரமாக விளையாடி பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்தனர். அபாரமாக விளையாடிய ஹெட்மயேர் 75 ரன்களை குவித்தார். குர்கீரத் 65 ரன்களை விளாசினார்.இதனால் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் SRH அணி பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.