சமீப காலமாகவே ஒரு சிலர் சமூக வலைதளத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் எளிதில் ட்ரெண்ட் ஆகிவிடுகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு புருவ அழகி பிரியா வாரியர் தனது புருவங்களை அழகாக அசைத்து சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஒரே இரவில் ஒன்றரை லட்சம் பேர்! பெங்களூர் இளம் பெண்ணை திணற வைத்த சம்பவம்!

இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் மேலும் ஒருவர். நேற்றய முன் தினம் நடைபெற்ற IPL போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசெர்ஸ் ஹைதரபாத் அணியும் போட்டியிட்டனர். இதில் RCB அணி மிக சிறப்பாக விளையாடி போட்டியை வென்றனர்.
RCB அணியை உற்சாக படுத்த வந்த ரசிகர்களுள் பெண் ஒருவர், மிகவும் சிறப்பாக RCB அணியை உற்சாக படுத்தியது மட்டுமில்லாமல், அங்கிருந்த பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். அவரது பெயர் தீபிகா கோஸ். இவரை சமூக வலைதளத்தில் பின்பற்றும் ரசிகர்கள் ஒரே இரவில் பல மடங்காக பெருகிவிட்டனர்.
மேலும் இவருக்கு என்று ரசிகர் பட்டாளமே இப்போது உருவாகிவிட்டது என்றே கூறலாம். இவரை பற்றிய அனல் பறக்கும் கமெண்ட்ஸ்கள் மிகவும் ட்ரெண்டிங்காக சமூகவலைத்தளத்தில் உலா வருகிறது.
ஒரு சிலர் இந்த பெண்ணை அடுத்த ஆண்டு நடைபெறும் எல்லா மேட்ச்களுக்கும் விராட் கோலி அழைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் தீபிகா வந்ததால் தான், RCB இந்த போட்டியை வென்றது என்றும் ட்வீட் செய்துள்ளனர். அதேபோல் இன்னொருவர் தன் அம்மாவிடம் இந்த பெண் எங்கிருந்தாலும் தேடி தருமாறு கேட்க போகிறேன் என்றார்.
மற்றும் ஒருவர் RCB அணி இந்த போட்டியை வென்று இருக்கலாம் , ஆனால் அந்த கேமரா மேன் எங்களது இதயங்களை வென்று விட்டார் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் தீபிகாவை வைத்து பல வித மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் குவிகின்றன.