கோலி அணியை ஸ்கெட்ச் போட்டு சுருட்டிய வீசிய தோனி! 70 ரன்களில் கவிழ்ந்த பெங்களூர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.


டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது.தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோஹ்லி 6 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்து வீச்சில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய மொயீன் அலி யின் விக்கெட்டையும் ஹர்பஜன் சிங் வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீவில்லியர்ஸும் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்ததாக களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயேர் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.இதனால் ராயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணி ரன்  எடுக்க முடியாமல் திணறியது. பின்னர் பந்து வீசிய இம்ரான் தாஹிர் சிவம் துபே ,சைனிசஹால் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை நிலைகுலைய செய்தார்.

ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. அந்த அணியின் பார்திவ் படேல் மட்டும் 29 ரன்களை எடுத்தார். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற சுலபமான  இலக்கை சென்னை அணி சேஸ் செய்யவுள்ளது.