இந்திய பொருளாதாரம் அச்சத்தில் உள்ளது - எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்!

இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை மிகவும் கவலையளிப்பதாகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தனியார் துறையை முதலீடுகள், புதிய சீர்திருத்தங்கள் மூலம், உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் புதிய அளவீடுகளைப் பற்றி விமர்சனம் செய்துள்ள, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன். இந்திய பொருளாதாரத்தை எண்ணி கவலை தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமின்றி இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதைக் குறித்து மோடி அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.. 

இந்திய வளர்ச்சி விகிதங்கள் குறித்து தனியார் பொருளாதார நிபுணர்களிடம் உள்ள பலவிதமான வளர்ச்சி கணிப்புகள் அரசாங்க குறியீடுகளுக்கு குறைவாகவே இருக்கின்றன, 

நிச்சயமாக பொருளாதாரத்தின் மந்தநிலை மிகவும் கவலைக்குரிய ஒன்றுதான். நாணயக் கொள்கைக் குழு சமீபத்தில் 2019-20 நிதியாண்டுக்கான அதன் வளர்ச்சி கணிப்பை ஜூன் மாதம் 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைத்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனின் ஆய்வறிக்கையிலும் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எண்ணிக்கை 2011 க்கு பிந்தைய காலகட்டத்திற்கு பிறகு. ஆண்டுக்கு சுமார் 2.5 சதவீத புள்ளிகள் மிகைப்படுத்தப்பட்டு காட்டுவதாக கூறும்   

இவர். 2018 ஆம் ஆண்டில் உலகின் 78 வது ஊழல் நிறைந்த நாடாக இந்தியா விளங்குவதாக தெரிவிக்கிறார்.

உண்மையாகவே  வளர்ச்சி விகிதம் 2011 மற்றும் 2016 க்கு இடையில் 6.9 சதவீத வளர்ச்சி என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும்.  அது 3.5 முதல்  5.5 சதவீதமாகத்தான் இருக்கிறது என தெரிவித்தார் . இவர் சொல்வது போலவே கடந்த நான்கு காலாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 8% இருந்து  6% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முறையை இந்த அரசு மறுசீரமைத்த பின்னர்.  உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் விதத்தில். ஒரு தனித்துவமான நிபுணர்களின் குழுவின் விளக்கம் ஒன்று தேவைப்படுகிறதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் 

 ரகுராம் ராஜன் இந்த அரசின் பொருளாதார அளவீடுகள் பற்றி சந்தேகம் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.    இந்தியா முன்னணி பொருளாதார வழிகாட்டலில்  கலந்துகொள்வது பல  அசௌகரியமான பொருளாதார நிலைகளை அடையப் போவதாகவும். உலகளாவிய பொருளாதார வல்லுநர்களால்  இந்தியாவிற்கு ஒரு சுருக்கமான குறியீடு கொடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.     

அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் செயல்படுகிறது என   குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.  

மேலும், பொருளாதாரத்தை உயர்த்தவும், தனியார் துறையை முதலீடுகளை  உத்வேகப்படுத்தவும் "புதிய சீர்திருத்தங்கள்" உடனடியாக தேவை என்று ரகுராம் ராஜன் கூறுகிறார் .  

மின்சாரம் மற்றும் வங்கி சாரா நிதித்துறைக்கு அடுத்ததாக பிரச்சினைகள் எழ இருக்கிறது என்றும். "அடுத்த ஆறு மாதங்களில் இந்த   சிக்கல்களை சரி செய்வது இன்றியமையாதது என கூறியுள்ளார்.

இப்போது அவர் சொன்னது போலவே இந்தியாவின் பொருளாதார அறிக்கைகளும். அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

அதன்படி கடந்த  45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன்முதலாக  இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது, இது தற்போது மேலும் கூடி 7 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனிநபர் வருமானம் குறைந்துள்ளது.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் தேசிய வருமான மட்டத்தை தனிநபர் வருமானத்திலிருந்து தான் பார்க்க முடியும். தனிநபர் வருமானம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், இந்திய பொருளாதாரம் வருமானம் மற்றும் செலவினங்களில் மிகப்பெரிய  ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது.

அதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையான விலைவாசி போராட்டத்தில் சிக்கி. மொத்த வருமானத்தையும் இழந்து தவிக்கும் நிலைக்கு இந்திய குடிமக்கள்  தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு அறிக்கை.

மொத்த மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  நாட்டின் மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில்  20% வளர்ந்துள்ளது, இது உணவுப் பற்றாக்குறை, சுகாதார சரிவு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.  பொருளாதார வளர்ச்சி எண்கள் நம்பிக்கைக்குரியவை என்றாலும், பெரும்பாலான குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மாறவில்லை என்று தான் கூற வேண்டும். 

மணியன் கலியமூர்த்தி.