கொரோனா தனிமை..! கர்ப்பிணி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற இளைஞன்! அதிர வைக்கும் காரணம்!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சத்தால் ரஷ்யாவில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் , கர்ப்பிணி பெண் உட்பட 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யாவை சேர்ந்த அண்டன் பிராஞ்சிகோவ் என்ற 31 வயதாகும் நபர் ஒருவர் கொரோனா வைரஸ் அச்சத்தால் தன்னைத்தானே தனிமைபடுத்திக் கொண்டிருந்தார். அவரது பக்கத்து வீட்டில் எவ்ஜெனி மற்றும் கிறிஸ்டினா என்ற தம்பதியினர் மற்றும் மூன்று ஆண்கள் வசித்து வந்தனர். இதில் கிறிஸ்டினா என்பவர் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பக்கத்து வீட்டிலிருந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பேரும் சத்தம்போட்டு கத்திக் கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பிராஞ்சிகோவ் கோபமடைந்து பக்கத்து வீட்டில் இருந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்த சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றினர். பின்னர் இந்த கொலைகளுக்கு காரணமான பிராஞ்சிகோவ் என்பவரையும் போலீசார் கைது செய்து கொலை செய்ததற்கான காரணத்தை கேட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.